அதிக சர்க்கரை உள்ள உணவுகளால் ஏற்படும் நோய்கள். மிகவும் கவனமாக இருங்கள்.

இயற்கையாகவே நாம் உட்கொள்ளும் உணவுகளில் சர்க்கரை சத்து காணப்படுகிறது. 
இது மட்டும் அல்லாமல் பழங்கள் மற்றும் காய்கறிகளில் சர்க்கரை சத்து இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே இதில் இருக்கும் சர்க்கரை சத்து நம் உடலுக்கு போதுமானதாக உள்ளது. 

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் தெரிந்தும் தெரியாமலும் தவிர்க்க முடியாமல் வெள்ளை சர்க்கரையை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். இந்த வெள்ளை சர்க்கரை நமக்கு சில நோய்களை உண்டாக்குகிறது. இதனால் நம் உடம்பில் ஏற்படும் நோய்களை பற்றி பார்ப்போம்.

சர்க்கரையால் உடல் எடை அதிகரிப்பு:

அதிக அளவு வெள்ளை சர்க்கரை உணவை நாம் எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதீத சர்க்கரை அளவு உள்ள உணவுகள் உட்கொள்ளும் போது  லெப்டின் என்ற ஹார்மோன்  குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

பல் சொத்தை விரைவில் ஏற்படும்: 

அதிக சர்க்கரை உணவை எடுத்து கொள்வதனால் பல் சொத்தை மற்றும் பல் சிதைவு ஆகியவை விரைவில் ஏற்படும். 

இனிப்பான உணவுகள் உட்கொள்ளும் போது வாயில் உள்ள பாக்டீரியா அதிகம் வளர்ச்சி அடைந்து நம் பல்லில் உள்ள மேல் அடுக்கை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தும். இதனால் சொத்தை ஏற்படுத்தும். பல் வலிமை இல்லை என்றால் உடல் வலிமை குறையும்.

இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும்:

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதய நோய் ஆபத்து அதிகரிக்கலாம். சமீபத்திய ஆய்வின் படி அதிகப்படியான சர்க்கரை உணவை எடுத்து கொள்வதனால் இதய நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

நீரிழிவு நோய் தாக்கம்: 

அதிகம் சர்க்கரை அளவு உணவை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை ஆனால் சர்க்கரை மிக அதிகம் கொண்ட குளிர் பானங்களால் நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளது. அதிக சர்க்கரை உணவினால் உடல் எடை கூடுகிறது. இதனால் நீரிழிவு நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் குளிர் பானங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

குறிப்பு:  நம் பதிவில் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் அனைத்தும் தகவல் அடிப்படையில் கொண்டவை. 
பயன்பாட்டிற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் நன்று.