சென்னையில் பெண்களுக்கு பிங்க் நிற இலவச பேருந்து வசதி இன்று முதல் தொடக்கம்.


தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில்  பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

ஆனால் சில சமயங்களில் அவசரத்தில் அல்லது குழப்பத்தில் பெண்கள் சாதாரண பேருந்துக்கு பதிலாக விரைவு அல்லது டிலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். 
இந்த சுழலை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பெண்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்தை அறிந்திடும் வகையில் சென்னையில் பேருந்துற்கு பிங்க் நிற வண்ணத்தில் முகப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதற் கட்டமாக சென்னையில் 60 பேருந்துகளுக்கு பிங்க் நிற முகப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பல பேருந்துகளுக்கு மற்றும் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.