ஒரு முறை மட்டுமே ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய முடியும். அப்படியா!

ஆதார் எண் நமக்கு மிக முக்கியமான அடையாள அட்டை. இந்திய அரசால் UIDAI அமைப்பு மூலம் நமக்கு வழங்கும் 12 இலக்க எண். 

இதில் நாம் புதிதாக பதியும் போது சிறு தவறுகள் செய்தால் நாம் அதை UIDAI இணையதளத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

UIDAI தகவல் படி ஆதார் அடையாள அட்டையில் சில மாற்றங்களை ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே செய்ய முடியும். அந்த தகவல்களை என்ன என்று பார்ப்போம். 

பெயர் மாற்றம்:
ஆதார் அட்டையில் நம் பெயர் மாற்றத்தை இரு முறை மட்டுமே மாற்றம் செய்யமுடியும். 

பிறந்த தேதி:
பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். ஒருமுறைக்கு மேல் மாற்றம் செய்ய வேண்டும் எனில் அதற்கு விதிவிலக்கு வாங்க வேண்டும். 

பாலினம் மாற்றம் : 
ஒரே ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அதற்கு மேல் செய்ய தனி விதிவிலக்கு பெறுவது அவசியம். 

ஆகவே ஆதார் பதிவு செய்யும் முன் நமது தரவுகளை சரி பார்த்து கொள்வது மிகவும் நல்லது. 

மேலும் ஆதார் பற்றிய விவரங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.