சீரக தண்ணீரால் ஏற்படும் தீமைகள் 

சீரகம் நம் வாழ்வியல் உணவு பழக்கத்தில் பயன்படுத்தி வருகிறோம். அதுவே சில நேரங்களில்  மருத்துவ பயன்பாட்டிற்கும் நாம் எடுத்துக் கொண்டு வந்துள்ளோம், குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைந்துள்ளது.

ஆனால் அதே சீரகம் நமக்கு நன்மைகளுடன் சேர்த்து தீமைகளும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. அது எப்போது தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம். 

நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று போக்கு:

ஜீரணத்துக்கு அதிகம் உதவும் சீரகத்தண்ணீரை அதிக அளவுக்கு மேல் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை பாதிக்கலாம் அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம் மேலும் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தவும் செய்யலாம். 

கல்லீரலில் பக்கவிளைவு:
ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் சீரக தண்ணீர் மட்டுமே குடிக்க நல்லது.  ஒன்றுக்கு மேற்பட்ட  அளவு சீரக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதிகப்படியாக சீரக தண்ணீர் குடிப்பது கல்லீரலில் பக்க விளைவுகளை உருவாக்கும்.

வாய் துர்நாற்றம் மற்றும் வாயு தொல்லை: 

சீரக தண்ணீரை அதிகமாக குடிப்பது மோசமான வாய் துர்நாற்றம்,
எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.  சீரான அளவாக எடுக்கும் போது இதற்கு சிகிச்சையளிக்கும் என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது அதிகப்படியான வாயு வெளியேற காரணமாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் இரத்த போக்கு அதிகரிப்பு:
அதிகப்படியான சீரக தண்ணீர் குடிப்பது பெண்களுக்கு மாதவிடாய் இரத்த போக்கை அதிகரிக்கும். இது கடுமையான மாதவிடாய் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு பிறகு சீரக தண்ணீர் எடுப்பது சிக்கல்களை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் சீரக தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு:  நம் பதிவில் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் அனைத்தும் தகவல் அடிப்படையில் கொண்டவை. 
பயன்பாட்டிற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் நன்று.