நீரழிவு (Diabetes) நோய் அறிகுறிகள்
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே இரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும். அது நீரிழிவு (சர்க்கரை) நோயாக கூட இருக்கலாம். 

அதீத தாகம் எடுத்தல். நாக்கு வறண்டு போகுதல்.  தண்ணீர் தாகம் அடிக்கடி ஏற்பட்டால் உடனே சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

மூன்று அல்லது நான்கு முறை இரவு நேரம் தூக்கத்தில் இருந்து  எழுந்து அதிகப்படியான சிறுநீர் கழித்தல், நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும்.

உடல் எடை வேகமாக குறைந்தால் உடனே சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். நீரழிவு நோயாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இயல்பை விட அதிக உடற்சோர்வு அல்லது உடல் களைப்பு ஏற்ப்பட்டால் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டால் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். 

மேலே குறிப்பிட்டததில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல், அவர் உடனடியாக நீரிழிவு நோய் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.