உடலுக்கு வலி ஏற்படாமல், உடல் வலியை நீக்கும் ஓரே உடற்பயிற்சி எது என்றால், அது யோகாசனம் மட்டுமே. யோகா என்பது பல கோணங்களில் உடலை அசைத்து, வளைத்து, மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் ஒரு வகையான பயிற்சியாகும். இதனால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெற முடியும். உடல் பருமன் , சர்க்கரை கட்டுப்படுத்துதல் , ரத்த அழுத்தம், மன அழுத்தம், இப்படி பல பிரச்னைகளை தீர்க்க, யோகாவை முறையாக பயிற்சி செய்தால் போதும்.

யோகா செய்யும் போது பயிற்சியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அது குறித்து இப்போது பார்க்கலாம்.


யோகா செய்யும்போது பின்பற்றவேண்டியவை .

யோகா செய்யும் இடத்தை நாம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

ஆசனங்களை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். நீங்கள் பலவீனமாக உணர்ந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.

யோகாப்பயிற்சி செய்வதற்கு முன் சிறுநீர் மற்றும் மலம் கழித்திருக்க வேண்டும்.

யோகா செய்வதற்க்கு முன் சிறிது நேரம் தியானம், அல்லது பிராத்தனை செய்யலாம். இதனால் மனம் ஒரு நிலைக்கு வரும்.

அதேபோல் யோகா செய்யும் முன் கண்டிப்பாக உடலை தளர்த்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனால் சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கும்.

எல்லா ஆசனங்களையும் மெதுவாக, நிதானமாக செய்ய வேண்டும். அந்த அந்த பயிற்சிக்கு தேவையான உடல் மொழியை பின்பற்ற வேண்டும்.


யோகா பயிற்சிக்குச் செல்வதற்கு முன் நீரேற்றமாக இருங்கள். காலை எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

யோகா பயிற்சிகளின் போது உடல் உறுப்புகள் வெகு இயல்பாக அசைக்க வேண்டும். அதனால் தளர்வான ஆடைகளை அணியவும்.

நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் பயிற்சி செய்யவேண்டும்

யோகாசனத்தை பிடிப்புடன் செய்ய யோகா மேட்டை பயன்படுத்தவும்.

யோகாசனங்களைச் செய்யும்போது சுவாசிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் அந்தந்த பயிற்சிக்கு ஏற்றவாறு சுவாசிப்பது நல்லது.

பயிற்சியை முடிக்கும் போது உடல் சூடு அதிகரித்து காணப்படும். அதனால் உடலை குளிர்ச்சியடைய செய்யும் தளர்வு நுட்பங்களுடன் பயிற்சியை முடிக்கவும்.