இரவில் தூக்கம் வராமல் அவதி படுகிறீர்களா?.. அப்போ இது உங்களுக்குதான்.

மனிதனுக்கு தூக்கம் மிக அவசியமானது. குறைந்தது 8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் இப்போது உள்ள கால கட்டத்தில் இயல்பாக வரும் தூக்கத்தை நாம் தொழில்நுட்ப சாதனங்களான மொபைல் போன், டிவி, மற்றும் கம்ப்யூட்டர் மீது ஆர்வத்தால் தூக்கத்தை தொலைக்கிறோம். இதனால் தூக்கமின்மை தானாகவே ஏற்படுகிறது.

இதை தவிர்க்க நாம் செய்ய வேண்டியதை சற்று பார்ப்போம்.

இரவில் சரியாக தூக்கம் வரவில்லை என்றால் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.இதனால் உடல் சோர்வு ஏற்படும் அது தூக்கம் வர உதவியாக இருக்கும். 

தூங்கும் முன் காபி அல்லது டீ குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது மூளைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தூக்கம் வருவதை சிறிது நேரம் தவிர்த்து விடும். 

நம் மக்கள் சில காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தூக்கமின்றி தவிப்பார்கள் ஆகவே தூங்கும் முன் யோகா பயிற்சி செய்வதன் மூலம் மனம் நிம்மதி ஏற்பட்டு தூக்கம் வரும்.

இதை எல்லாம் விட தூங்குவதற்கு அரை மணி நேரம் முன் மொபைல் போன், டிவி பார்ப்பதை தவிர்க்கவும். இதை செய்தால் கண் வலி ஏற்படாமல் தவிர்த்து இயல்பான தூக்கம் ஏற்படும்.

இரவில் தூங்கும் பொது மெல்லிய எடை உள்ள போர்வைகளை விட அதிக எடை உள்ள போர்வைகளை பயன்படுத்தினால் அது உடம்பிற்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்து தூக்கத்தை ஏற்படுத்தும்.

கால்களுக்கு சாக்ஸ் அணிந்தால் வெதுவெதுப்பு ஏற்படும். இதனால் தூக்கம் நன்றாக வரும்.